சித்த வித்யா யோக பீடம்

சித்த வித்யா யோக பீடம், இந்தியாவின் கேரளாவில் அமைந்துள்ள ஸ்ரீவித்யா தந்த்ர பீடத்தின், சித்த யோகத்தை கருப்பொருளாக கொண்ட ஒரு முன்னெடுப்பாகும். இந்த முன்னெடுப்பின் நோக்கமானது, ஆர்வமுள்ள மற்றும் உண்மையான சாதகர்களுக்கு, அவர்களிடம் எந்தவித பணப் பங்களிப்பையும் எதிர்பார்க்காமல், சித்த யோகத்தைப் பற்றிய ஞானத்தை போதித்து, இதை யோகேஷ்வரி தேவிக்கு ஒரு சேவையாக அர்பணிப்பதாகும்.

சித்த யோகம் என்பது உடலைச் செம்மைப்படுத்தவும், நோய்களைக் குணப்படுத்தவும், உடலைப் புத்துணர்ச்சியூட்டவும் உதவும் ஒரு பயனுள்ள முறையாகும். இது அகப்பயணத்தை மட்டுமே மையமாகக் கொண்ட ஒரு யோக முறை அல்ல. சித்த யோகம் உலகியல் மற்றும் ஆன்மீகம் ஆகிய இரண்டிலும் கவனம் செலுத்துகிறது, இதனால் இது கலியுகத்திற்கு மிகவும் ஏற்றதாக அமைகிறது. இந்த முன்னெடுப்பானது, பொருளாதார நிலை, பாலினம், மதம் அல்லது பிற பாகுபாடுகள் ஏதுமின்றி, சித்த யோகத்தில் ஆர்வமுள்ள எவரும் இதனைக் கற்றுப் பயிற்சி செய்வதற்கான வாய்ப்புகளை நல்கும்.

error: Content is protected !!